
இலங்கையில் தயாரிக்கப்பட்ட கடலோர பாதுகாப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் ஒன்பது படகுகள் நைஜீரியாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.வெலிசரையில் உள்ள கடற்படை முகாமில் உள்ள படகு தொழிற்சாலையில் இந்த படகுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.இலங்கையில் தயாரிக்கப்பட்ட படகுகள் வெளிநாடு ஒன்றுக்கு விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த விற்பனை மூலம் சுமார் 60 கோடி ரூபா வருவாய் கிடைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
நைஜீரிய அரசாங்கத்தின் சார்பில் படகுகளை கொள்வனவு செய்யும் நிகழ்வில் இலங்கைக்கான நைஜீரிய தூதுவர் எஸ்.யூ. அஹமட் பங்கேற்றுள்ளார்.1994 ஆம் ஆண்டு முதல் அன்று காணப்பட்ட தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடற்படையினர் சிறிய படகுகளை தயாரிப்பதை ஆரம்பித்தனர்.போரின் இறுதிக்கட்ட நடவடிக்கைகளின் போது மனிதபிமான நடவடிக்கைகளுக்கு இந்த படகுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர்.





