மூன்று மணி நேரம் ஸ்மார்ட் போன்களில் நேரத்தினை செலவிடும் இளைஞர்கள்!!

465

1 (68)

உலகமயமாக்கல் காரணமாக இலத்திரனியல் சாதனங்களின் வருகை அதிகரித்துள்ளன. இதன் காரணமாக மனிதனது தேவைகளும், வேலைகளும் இலகுபடுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு வெளிவரும் இலத்திரனியல் சாதனங்கள், குறிப்பாக ஸ்மார்ட் போன்கள் மனிதனது வாழ்வியலோடு ஒன்றித்து விட்டது.

இந்நிலையில், இளைஞர்கள் நாள் ஒன்றுக்கு 3 மணி நேரம் ஸ்மார்ட் போன்களில் நேரத்தினை செலவிடுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.குளோபல் வெப் இன்டக்ஸ் எனும் குறித்த புள்ளவிபரத்தின்படி, 1980ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த பெரும்பாலான இளைஞர்கள் ஸ்மார்ட் போன்களில் நேரத்தை செலவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 18 வயது முதல் 32 வயது வரையான இளைஞர்கள் சராசரியாக நாள் ஒன்றுக்கு 3 மணியே 14 நிமிடம் ஸ்மார்ட் போன்களில் நேரத்தினை செலவிடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த எண்ணிக்கையானது 2012ஆம் ஆண்டிற்கு பின்னர் அதிகரித்துள்ளதாகவும், மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை, ஸ்மார்ட் போன் மோகமுடையவர்களுக்காக அண்மையில் ஜெர்மனியில் சாலைகளின் தரைகளில் வீதி சமிஞ்சைகள் பொருத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.