
இத்தாலியில் பணி புரிந்த 10 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிய ஆவணங்கள் இன்றி தொழில் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இத்தாலி மொன்சா பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது 10 பேரும் கைது செய்யப்பட்டதாக இத்தாலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பத்துப் பேரில் இரு பெண்களும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் வதிவிட அனுமதி பத்திரம் இன்மை காரணமாக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.இது குறித்து இத்தாலிய பொலிஸார் மேலதிக விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.





