
பொல்கஹவெல உடபொல தோட்டத்தில் 10 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
18 வயதான ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சிறுமி தனிமையில் இருந்த போது வீடொன்றுக்குள் அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை பொல்கஹவெல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்ப்பட்டுள்ளது.





