மாயமாகிய மரணதண்டனைப் புத்தகம்!!

1187

FEAT_MISSING

கொழும்பு மாநகர சபையின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரின் தந்தையான கருணாரத்ன லியனகேயை, சுட்டுக்கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில், மரணதண்டனைத் தீர்ப்பு எழுதப்பட்ட வழக்குப் புத்தகம் மாயமாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு 1994ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

குறித்த சந்தேக நபர் தப்பியோடியிருந்த நிலையில் 22 வருடங்களிற்கு பின்பு அண்மையில் புறக்கோட்டை மெனிங் சந்தையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்றைய தினம்(09) ஆஜர்படுத்தப்பட்டதாகவும், அப்போது வழக்குப் புத்தகம் இல்லாமையினால், மரணத்தண்டனை வழங்கப்பட்ட தீர்ப்பு அறிவிப்பதனை ஒத்திவைத்துள்ளது.இதனடிப்படையில், சந்தேகநபரை எதிர்வரும் 25ஆம் திகதி வரையிலும் விளக்கமறியில் வைக்குமாறும் மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்திய திலக உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.