
வவுனியா லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வவுனியா மாவட்ட சமூக ஒற்றுமைக்கான மக்கள் பேரவையினால், வவுனியா இறம்பைக்குளம் சமுர்த்திச் சங்கத்தில் நடைபெறும் ஊழல்கள் தொடர்பாகவும், இச்சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் ஒருசிலர் இச்சங்கத்தை தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பதாகவும், இவர்களே தொடர்ச்சியாக இவர்களின் பெயர்களிலும், வெவ்வேறு நபர்களின் பெயர்களையும் பயன்படுத்தி கடன் பெற்றுவருவதாகவும் அம்முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
இம் முறைப்பாட்டில்..
வவுனியா இறம்பைக்குளம் கிராமசேவையாளர் பிரிவில் இயங்கும் சமூர்த்தி இயங்கு தளத்தில் ஊழல்கள் நிறைந்து காணப்படுவதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் பலரின் வாய்கள் மூலமாக முனுமுனுக்கப்பட்டாலும் கூட, இவைகள் அனைத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் என்று தவிர்க்க முடியாத நிலையில் அன்று நடந்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக முன்னைய சமூர்த்தி உத்தியோகத்தினரால் வங்கியில் இருந்த ஆவணங்கள் எரிக்கப்பட்ட நிலையையும் பத்திரிக்கையில் செய்தியாக வெளிவந்த நிலையில்,
மீண்டும் ஒரு ஊழல் குற்றச்சாட்டு நேரில் கண்டறியப்பட்டு ஒரு புதன்கிழமை நடைபெற்ற சமூர்த்திக் கூட்டத்தில் கிராம சேவையாளர், சமூர்த்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சிவில் பாதுகாப்பு குழுவினரின் முன்நிலையில் பாதிக்கப்பட்டவர்களால் சுட்டிக்காட்டப்பட்டு மிகவும் காரசாரமான விவாதத்துடன் கூட்டம் நிறைவு பெற்ற நிலையில்..
தொடந்தும் இப்படியான சம்பவங்கள் நடந்து கொண்டு இருப்பதாகவே நாம் சந்தேகிக்கின்றோம். ஆரம்பம் முதலே இச் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் ஒரு சிலர் மாத்திரமே இச்சங்கத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுடன், இவர்களே தொடர்ச்சியாக இவர்களின் பெயர்களிலும், வெவ்வேறு நபர்களின் பெயர்களையும் பயன்படுத்தியும் கடன்கள் பெற்று ஊழல்கள் செய்ததையும் கடந்த காலத்தில் நிருப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் உரிய நபர்கள் இப்படியான கடன்களைப் பெற்று வெளியில் அதிக வட்டிக்கு இன்றும் விடுவதாகவே நடைபெறும் சம்பவங்களைப் பார்க்கும் போது நாம் சந்தேகிக்க வேண்டியவர்களாகவே உள்ளோம்.
எனவே இறம்பைக்குளம் சமூர்த்திச் சங்கம் தொடர்பாக ஒரு விசாரணையை மேற்கொண்டு உண்மைகளைக் கண்டறிவதுடன், பழைய நிர்வாகத்தை கலைத்துவிட்டு, ஊழல் அற்ற புதிய நிர்வாகத்தை கண்கானிப்புடன் செயற்படுத்த ஆவண செய்யுமாறும் சமூக ஒற்றுமைக்கான மக்கள் பேரவை தங்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றது.
நகல்கள்.
பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், வவுனியா.
சமூர்த்தி வங்கி முகாமையாளர், பிரதேச செயலக வளாகம், வவுனியா.
லஞ்ச ஊழல் ஆணைக்குழு, வவுனியா மாவட்டம்.






