வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 10 பேர் சமூகத்துடன் இணைக்கப்பட்டனர்!!

565

 
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுப் பயிற்சியினைப் பெற்றுவந்த பெண் உட்பட 10 பேர் இன்று (10.05.2016) சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டனர்.

வவுனியா புனர்வாழ்வு பொறுப்பதிகாரி கேணல் எம்.ஏ.ஆர்.எமில்டோன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 6 பேர் ஒருவருட புனர்வாழ்வு பெற்றதுடன் 4 பேர் கிராமசேவையாளர்கள் (பெண் உட்பட) 3மாத புனர்வாழ்வு பெற்றுவந்துள்ளனர்.

மொத்தம் 10பேர் இன்று அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பின்ஆய்வு இணைப்பதிகாரி கேணல் பி.பி.எச்.பெர்ணான்டோ, பூந்தோட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயதிலக, பௌத்த சமயத் தலைவர், போராளிகளின் உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

DSC03493 DSC03496 DSC03500 DSC03501 DSC03503 DSC03507 DSC03510 DSC03515 DSC03525