அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2018 ஆம் ஆண்டு வெளியாகும் சாத்தியம்!!

450

Avatar

உலகம் முழுவதும் மாபெரும் வெற்றிபெற்ற அவதார் படத்தின் மேலும் 4 பாகங்கள் வெளிவரும் என அப்படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கெமரன் தெரிவித்திருக்கிறார். ஐந்தாவது பாகம் 2023 இல் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் 3 பாகங்கள் வெளியாகுமென ஜேம்ஸ் கெமரன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால், தன்னிடம் இருக்கும் கதை மூன்று பாகங்களுக்குள் அடங்காது என தற்போது கூறியிருக்கிறார்.

உலக அளவில் இதுவரை வெளியான திரைப்படங்களில், அதிக வசூல் செய்த படம் அவதார். 2009ல் வெளியான இந்தப் படம் தற்போதுவரை 2.7 பில்லியன் டொலர்களை வசூலித்திருக்கிறது.

அவதார் படத்தின் 2 ஆவது பாகம் 2018 இலும் அதற்கடுத்த பாகங்கள் 2020, 2022, 2023 இலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிவென்டியத் சென்சுரி ஃபாக்ஸ் நிறுவன விழாவிலேயே இந்தத் தகவல் வெளியிடப்பட்டது.