சட்டவிரோதமாக பெண்களை வௌிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் நால்வர் பிடிபட்டனர்!!

483

arrests

பெண்களை சட்டவிரோதமாக வௌிநாட்டுக்கு வேலைக்காக அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களால் போலி விசா மற்றும் பாஸ்போட்கள் தயாரிக்கப்பட்டு, பெண்கள் வௌிநாட்டுக்கு வேலை நிமித்தம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் மிகவும் சூட்சமமான முறையில், வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் வௌிநாட்டு வேலை வாய்ப்புக்கான பதிவினையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.



இந்தநிலையில், வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்திற்கு இது தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டினை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக கருதப்படும் பெண் ஒருவரைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் கூறியுள்ளது.