இலங்கையில் அதிகரித்துவரும் எச்.ஐ.வி நோயாளர்கள்!!

572

HIV-AIDS

இலங்கையில் முன்பைவிட கூடுதலாக, எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அரசின் தேசிய பாலியல் தொற்றும் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு திட்டத்திற்கான பிரிவு தெரிவித்துள்ளது.

1986ஆம் ஆண்டு எய்ட்ஸினால் பாதிக்கப்பட்ட முதல் நபர் அடையாளம் காணப்பட்டதிலிருந்து இன்று வரை, இலங்கையில் சுமார் 2377 பேருக்கு மட்டுமே எச்.ஐ.வி. தொற்று இருக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்த பிரிவின் சிறப்பு நிபுணரான டாக்டர் வீரசிங்க கூறினார்.

எனினும் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 68 பேர் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் முன்பைவிட பரிசோதனை வசதிகள் அதிகம் இருப்பதனாலும், ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாலும் இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது சுலபமாக உள்ளது எனவும் டாக்டர் வீரசிங்க கூறுகிறார்.

எனினும் இதர நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் எச்.ஐ.வி. தொற்று பரவுவது கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

-பிபிசி-