400 கோடி ரூபா கள்ள நோட்டுகள் புழக்கத்தில்!!

498

maxresdefault

இந்தியாவில் ரூ.400 கோடி கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொல்கத்தாவில் இயங்கும் இந்திய புள்ளியியல் நிறுவனம் நாட்டில் புழக்கத்தில் விடப்பட்டுள்ள கள்ள ரூபாய் நோட்டுகள் குறித்து ஆய்வு மேற் கொண்டது. அந்த ஆய்வில் மிகவும் அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது.

அதன்படி இந்தியாவில் ரூ.400 கோடி கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது தெரிய வந்தது. அவற்றில் ரூ.100 மற்றும் ரூ.500 கள்ள நோட்டுகள் பெருமளவில் புழக்கத்தில் விடப்பட்டு அவை பிடிபட்டுள்ளன. அதே நேரத்தில் இதைவிட 1000 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் சிக்குகின்றன.

நாட்டில் பிடிபடும் கள்ள ரூபாய் நோட்டுகளில் 50 சதவீதம் 100 ரூபாய் நோட்டுகள்தான் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதே நேரத்தில் ஆண்டுக்கு ரூ.70 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுகின்றன. தினமும் புழக்கத்தில் இருக்கும் ரூ.10 லட்சத்தில் ரூ.250 அளவில் கள்ள நோட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இந்நிலையில் அரசு மெத்தனம் காட்டாமல் கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்க தீவர நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என மத்திய அரசுக்கு இந்திய புள்ளியியல் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.