
வவுனியாவில் நேற்று(10.05) இரவு குளத்தில் மீன் பிடிப்பதற்கச் சென்றவர் இளம் குடும்பஸ்தர் இன்று அதிகாலையில் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியா சாளம்பைக்குளத்தைச் சேர்ந்த கலில் காமீன் (28வயது) திருமணமாகி ஒரு வருடமான இளம் குடும்பஸ்தர் குளத்தில் மீன் பிடிப்பதற்கு இவரின் உறவினருடன் சென்று வருவதுண்டு. நேற்று இரவு பூவரசம்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரமாணகுளம் பகுதியிலிருக்கும் குளத்திற்கு உறவினர் சிலருடன் மீன் பிடிப்பதற்குச் சென்றுள்ளார்.
எனினும் இவர்கள் இரு பிரிவினர்களாக கனரக வாகனத்தின் டியூப்பில் காற்று நிரப்பி 4பேர் இரண்டு டியூப்பில் மின் பிடிப்பதற்குச் சென்றுள்ளனர். இன்று அதிகாலை 12.30 மணியளவில் ஒருபிரிவினராக சென்ற இருவரின் டியூப்பில் காற்று வெளியேறியதையடுத்து நீரில் மூழ்கவிருந்தவர்கள் மற்றவர்களின் உதவியுடன் ஒருவர் உயிருடன் காப்பாற்றப்பட்டார்.
மற்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இரவு என்பதால் நீரில் மூழ்கியவரை தேடும் பணியினை நிறுத்திவிட்டு மற்றவர்கள் சென்றுவிட்டனர். இன்று அதிகாலை வேறு சிலரின் உதவியுடன் நீரில் மூழ்கியவர் தேடும் பணியினை மேற்கொண்டபோது நீரில் மூழ்கியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.






