
இலங்கையில் உள்ள பெண் ஓரின சேர்க்கையாளர்கள், ஆண் ஓரின சேர்க்கையாளர்கள், அரவாணிகள், பால்நிலை மாற்றுநர்கள் ஆகியோருக்கு அமெரிக்கா தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.
அமெரிக்க தூதுவர் அடுல் கெசாப் இந்த ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நேற்று சமவுரிமை மற்றும் புறக்கணிப்புக்கு எதிரான அமைப்புக்களின் பிரதிநிதிகள், அமெரிக்க தூதுவரை சந்தித்தனர். இதன்போதே கெசாப் தமது ஆதரவை வெளிப்படுத்தினார்.
இதேவேளை பிரித்தானியாவின் லிபரல் ஜனநாயகவாதியும் பால்நிலை மாற்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவியுமான பாரோனெஸ் பார்க்கர், தமது கருத்து ஒன்றில் இலங்கையில் ஓரின சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்காக போராடுபவர்கள் மரண அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்
இலங்கையில் சிங்ஹ லே என்று அமைப்பு இந்த அச்சுறுத்தலை விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் இந்த வன்முறை அமைப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாரோனெஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.





