
வெசாக் தினத்தை முன்னிட்டு நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து தான சாலைகளையும் பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.அத்துடன் தான சாலைகளை ஏற்பாடு செய்துள்ள அமைப்புகளுக்கு தேவையான அறிவுரைகள் வழங்குவதற்கும் எதிர்பார்த்துள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தான சாலைகள் நடத்தப்படும் பிரதேசத்தில் உள்ள மாகாண சபைகளில் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் வெசாக் பூரண தினத்தை முன்னிட்டு யாத்திரை செல்பவர்கள் பாதுகாப்பாக ஒரு வேளை உணவை உட்கொள்வதற்கும்,பொதுமக்களின் நலன் கருதியுமே குறித்த பதிவும், அறிவுரைகளும் வழங்கப்படுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுகாதார பரிசோதக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.





