கொழும்பை வர்த்தக நகராக மாற்ற, அரச நிறுவனங்கள் பத்தரமுல்லைக்கு மாற்றம்: சம்பிக்க!!

447

Ugo_Colombo_Brickell

கொழும்பில் உள்ள 113 முக்கிய அமைச்சுக்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் பத்தரமுல்லைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும், கொழும்பு நகரை முற்றிலும் வர்த்தக நகராக மாற்றுவதே இதன் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு நகரில் உள்ள அரச நிறுவனங்களை வெளியே கொண்டு செல்லும் திட்டத்தின் கீழ், செத்சிறிபாயவின் மூன்றாவது கட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், இதற்கமையவே 113 அரச நிறுவனங்கள் பத்தரமுல்லைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் பெருந்தெருக்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் காணப்படும் வாகன நெருக்கடி மற்றும் பொது மக்களின் தேவைப்பாடுகளைப் பற்றி சிந்தித்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய பிரதான அமைச்சு அலுவலகங்கள் 31, திணைக்களங்கள் 50 மற்றும் அரச நிறுவனங்கள் 32 என்பனவே இடமாற்றப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.இதேவேளை குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் என்பன பாராளுமன்றத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.