பேஸ்புக் அறிமுகம் செய்யும் மற்றுமொரு அப்பிளிக்கேஷன்!!

283

123

ஆரம்ப காலத்தில் இணைய உலாவியின் ஊடாக தனது சேவையினை வழங்கிவந்த பேஸ்புக் நிறுவனம் பிற்காலத்தில் பல்வேறு மொபைல் அப்பிளிக்கேஷன்களை அறிமுகம் செய்திருந்தது.பயனர்கள் மத்தியில் தொடர்ந்தும் நல்ல வரவேற்பு இருப்பதனை கருத்தில் கொண்டு மேலும் சில அப்பிளிக்கேஷன்களை அறிமுகம் செய்யும் முயற்சியில் அந் நிறுவனம் முனைப்பு காட்டி வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக Facebook Moments எனும் புதிய அப்பிளிக்கேஷன் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.இந்த அப்பிளிக்கேஷன் ஊடாக தனிப்பட்ட முறையில் (Private) புகைப்படங்களை பகிரக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டிலேயே இந்த அப்பிளிக்கேஷன் ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட போதிலும் அதில் உள்ளடக்கப்பட்டிருந்த முக அடையாளம் காணல் (Face Recognition) வசதி தரப்பட்டிருந்ததனால் எதிர்ப்பு ஏற்பட்டிருந்தது.

முக அடையாளம் காணல் (Face Recognition) வசதி என்பது பகிரப்படும் புகைப்படங்களினுள் ஒரே மாதிரியான முகங்களை தெரிவு செய்தல் ஆகும்.எனவே தற்போது முக அடையாளம் காணல் வசதி நீக்கப்பட்ட நிலையில் அனைத்து நாடுகளிலும் கிடைக்கக்கூடியவாறு புதிய பதிப்பாக குறித்த அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Facebook Moments அப்பிளிக்கேஷனினை தற்போது iOS மற்றும் Android சாதனங்களில் பயன்படுத்தி மகிழலாம்.