புகைப்பழக்கத்திற்கு அடிமையான குழந்தை: 3 வயதில் 60 சிகரெட் குடித்த அவலம்!!

313

3yearsmoke_child_002

இந்தோனேஷியா நாட்டில் 7 வயது சிறுவன் ஒருவன் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் 16 சிகரெட்டுகளை குடித்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. மேற்கு ஜாவா தீவில் உள்ள Cicapar என்ற சிறிய கிராமத்தில் வசித்து வரும் Iyan(36) மற்றும் Tati(32) என்ற தம்பதியினரின் ஏழு வயது மகன் Dihan Awalidan. இந்த சிறுவன் சிறுவயதிலேயே நண்பர்களுடன் சேர்ந்து புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதால், தினமும் 16 சிகரெட்டுகளை பிடித்து வருவது அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெற்றோர்கள் இருவருக்கும் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளதால், திஹான் 3 வயது இருக்கும்போதே சிகரெட் பிடிக்க தொடங்கியுள்ளான். அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல, ஒரு நாளைக்கு 60 சிகரெட்டுகள் வரை பிடித்து வந்துள்ளான். தற்போது சிறுவனுக்கு ஏழு வயது ஆகியுள்ளதால், உடல் நலனில் அக்கறை காட்டி சிகரெட் எண்ணிக்கையை குறைத்து ஒரு நாளைக்கு 16 சிகரெட்டுகள் பிடித்து வருகிறான். தனது மகனின் நிலை குறித்து பேசிய தந்தை Iyan, 3 வயதிலேயே சிகரெட் பிடிக்க பழகி கொண்டதால், ஒரு நாளைக்கு 3 பாக்கெட்டுகளை காலி செய்து விடுவான்.

சிகரெட் வாங்க பணம் கொடுக்கவில்லை என்றால், கீழே விழுந்து அழுவான், இல்லையென்றால் எனது சட்டை பாக்கெட்டில் இருந்து பணமோ அல்லது சிகரெட்டை திருடிக்கொண்டு சென்று விடுவான் என்று கூறியுள்ளார். தாயார் Tati கூறுகையில், எனது மகன் சிகரெட் பிடிப்பதை நிறுத்த எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அது அனைத்தும் பலனளிக்காமல் போய்விட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். முன்பு வீட்டிலேயே அனைவருக்கும் முன்பு தைரியமாக சிகரெட் பிடித்து வந்தான். ஆனால் இப்போது, யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு பின்னால் உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் சிறுவர்களுடன் சேர்ந்து பிடித்து வருகிறான் என்று கூறியுள்ளார்.

குழந்தை பருவத்திலேயே புகைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதை பற்றி பேசிய Campaign for Tobacco-Free Kids என்ற அமைப்பின் தலைவரான Matt Myers, இந்தோனேஷியாவில் சிறுவயதிலேயே புகைப்பழக்கத்திற்கு அடிமையாவது மிகச்சாதாரணம். உலகளவில் புகையிலை வியாபாரத்தை அதிக அளவில் செய்வதில் இந்தோனேஷியா 5வது இடத்தில் உள்ளதால், இங்கு புகையிலை கிடைப்பது மிக எளிது என்றும் இந்தோனேஷியாவில் மூன்றில் ஒரு சிறுவன் 10 வயதிற்கு முன்னதாகவே சிகரெட் பிடிக்க தொடங்கியிருப்பான் எனவும் கூறியுள்ளார்