அதிகளவில் வைபர் (Viber) பயன்படுத்துபவர்களா நீங்கள் : இதை கொஞ்சம் படியுங்கள்!!

916

Viber

அதிகமானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் மெசேஜிங் சேவைகளுள் வைபர் சேவையும் ஒன்றாகும். இதன் புதிய பதிப்பில் சில விரும்பத்தக்க மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனினும் நீங்கள் இதன் புதிய வசதிகளை பெற்றுக்கொள்ள வைபர் செயலியை அதன் அண்மைய பதிப்பிற்கு மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

வைபர் புதிய வசதிகள்..

வைபர் சேவையில் உயர் பாதுகாப்பு முறைமை

அண்மையில் வட்ஸ்அப் நிறுவனம் தனது சேவையில் end-to-end encryption எனும் உயர் பாதுகாப்பு முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.

தற்பொழுது வைபர் சேவையிலும் இதே பாதுகாப்பு முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே நீங்கள் ஏனையவர்களுடன் பகிரும் தகவல்களை எந்த ஒரு மூன்றாம் தரப்பினராலும் அறிந்துகொள்ள முடியாது.

அதேபோல் வைபர் சேவை மூலம் நீங்கள் ஏனையவர்களுடன் மேற்கொள்ளும் அரட்டையை (Chat) மறைப்பதற்கான வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது. மேலதிகமாக அவற்றுக்கு கடவுச்சொல் இட்டுக்கொள்ளவும் முடியும்.

அரட்டையை மறைப்பது எப்படி?

நீங்களும் இந்த வசதியை பெற விரும்பினால் அரட்டையை மறைக்க வேண்டிய நபரின் அரட்டைக்கான பகுதிக்குச் (Chat Window) சென்று அதன் வலது மேல் மூலையில் வழங்கப்பட்டுள்ள அமைப்புகளுக்கான குறியீட்டை சுட்டுக (Setting Icon)

1

இனி அதன் கீழ் பகுதியில் வழங்கப்பட்டுள்ள Hide Chat என்பதை தெரிவு செய்க.

2

பின்னர் தோன்றும் சாளரத்தில் உங்களால் இலகுவில் ஞாபகப்படுத்திக்கொள்ள முடியுமான ஒரு கடவுச்சொல்லை இடுக.

அவ்வளவு தான் இனி குறிப்பிட்ட நபருடன் நாம் மேற்கொண்ட உரையாடல்கள் அனைத்தும் மறைக்கப்பட்டுவிடும். (இது வைபர் சேவையில் உள்ள ஒரு குழுவுக்கும் பொருந்தும்)

மறைக்கப்பட்ட அரட்டையை திரும்பப்பெறுவது எப்படி?

மறைக்கப்பட்ட அரட்டையை திரும்பப்பெற வைபர் செயலியில் ஒரு இரகசியமான முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

3

அதாவது வைபர் செயலியின் Chat எனும் சாளரத்தின் வலது மேற்பகுதியில் தரப்பட்டுள்ள Search என்பதில் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்.

4

இனி மறைக்கப்பட்ட நபரின் அரட்டை தோன்றுவதை அவதானிக்கலாம்.அவ்வளவுதான்.