50 லட்சம் கேட்டு பாடசாலை மாணவன் கடத்திக் கொலை!!

622

Kolai

பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டம் யகன்கா சாராய் என்ற இடத்தை சேர்ந்தவர் நிரஞ்சன் பிரசாத். அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவரது மகன் ரித்திக் ராஜ் (வயது 15). அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான்.

பள்ளிக்கு செல்லும் போது அந்த மாணவனை மர்ம மனிதர்கள் கடத்தி சென்றனர். அவர்கள் மாணவன் தந்தை நிரஞ்சன் பிரசாத்துக்கு போன் செய்து 50 லட்சம் பணம் கொடுத்தால் மகனை விடுவிப்பதாக கூறி மிரட்டினார்கள். பொலிசுக்கு தகவல் சொன்னால் சிறுவனை கொன்று விடுவதாக அவர்கள் எச்சரித்தனர்.

ஆனால் அதையும் மீறி நிரஞ்சன் பிரசாத் பொலிசுக்கு புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை தேடி வந்தனர்.

பொலிசுக்கு தகவல் கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த கடத்தல்காரர்கள் மாணவனை கொலை செய்தனர். போல்பைகா என்ற இடம் அருகே பஞ்சாயத்து அலுவலகம் பகுதியில் பிணத்தை போட்டு விட்டு அவர்கள் தப்பி சென்று விட்டனர். பொலிசார் சிறுவனின் பிணத்தை கண்டெடுத்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் மீது கல்வீசி தாக்கினார்கள். இதில் சில போலீஸ்காரர்கள் காயம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து கூடுதல் போலீசார் வர வழைக்கப்பட்டு அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.