
இலங்கையில் வருடமொன்றிற்கு நாய்களைப் பராமரிப்பதற்கு 63 கோடி செலவு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் கடந்த வருடத்தில் மாத்திரம் நாய்க்கடிக்கு உள்ளானவர்களுக்கான தடுப்பூசியின் செலவு 40 கோடி ரூபாய் என்றும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் 2015ம் வருடத்திற்கான கணக்கெடுப்பின் படி வீடுகளில் 20லட்சம் நாய்கள் இருப்பதாகவும், இதில் 5லட்சம் நாய்கள் கட்டாக்காலி நாய்கள் உள்ளதாகவும் சுகாதார மற்றும் தேசிய வைத்திய அமைச்சு தெரிவித்துள்ளது.அத்துடன் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுள் 15லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார மற்றும் தேசிய வைத்திய அமைச்சின் பொது சுகாதார பணிப்பாளர் வீ.ஏ.எல்.ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.
மேலும், மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் பணிப்புரைக்கு அமைய கட்டாக்காலி நாய்களால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, நாய்கள் பராமரிப்பு மற்றும் நாய்களுக்கான தடுப்பூசிக்காக 23 கோடி ரூபாயை அரசாங்கம் செலவு செய்வதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





