வடக்கில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த உதவுமாறு இந்தியாவிடம் கோரிக்கை!!

512

1 (42)

வடக்கில் போதைப்பொருட்களின் அதிக பாவனையை கட்டுப்படுத்த இந்தியா உதவவேண்டும்என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரி ஜிபார்த்தசாரதியிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கின் கடற்பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில்பார்த்தசாரதியுடன் வடக்கு மீனவர்கள் சந்திப்பை நடத்தினர்.இதன்போது தமது இந்திய மீனவர்களால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை வடக்குமீனவர்கள் சுட்டிக்காட்டினார்கள் என்று யாழ்ப்பாண மீனவர் சம்மேளன தலைவர் நாகநாதிபொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியாவின் ஊடாக கேரளா கஞ்சா உட்பட்ட போதைப்பொருட்களின் கடத்தல்களும்அதிகரித்துள்ளதாக தாம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தப் போதைப்பொருட்களுக்கு வடக்கில் உள்ள தொழிலற்ற இளைஞர்கள் இலகுவில்அடிமையாகி விடுவதாக தாம் சுட்டிக்காட்டியதாகவும் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

பார்த்தசாரதி, தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்த போதும்அவருக்குள்ள மதிப்பின் அடிப்படையில் இந்த விடயங்களை இந்திய அரசாங்கத்தின்கவனத்துக்கு அவர் கொண்டு செல்ல வேண்டும் என்றும் தாம் கேட்டுக் கொண்டதாகபொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.இந்த விடயத்தில் இந்தியாவின் உதவியை வடக்கின் ஆளுநரும் கோரியிருந்தார்.இதேவேளை இந்த பிரச்சினைக்கு இந்தியாவை மட்டும் குற்றம் சுமத்த முடியாது, வடக்கில் உள்ள மக்களும் இந்த நிலைமைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று மன்னார்மாவட்ட மீனவர் சங்க தலைவர் நூர் மொஹமட் ஆலம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.