அயர்லாந்தில் சிறை கைதி விழுங்கிய கைத்தொலைபேசி அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டது!!

282

h

அயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்ளின் நகர சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 29 வயது கைதி சிறைக்காவலர்களுக்கு பயந்து சிறியரக மொபைல் போன் ஒன்றை விழுங்கியுள்ளார். விழுங்கிய 6 மணிநேரம் கடந்த பின்னர், அந்நபர் அங்கிருந்த ஊழியர்களிடம் நான் மொபைல்போனை விழுங்கிவிட்டேன் என கூறியுள்ளார்.

மொபைல்போனை விழுங்கிய காரணத்தால், அந்நபருக்கு தொடர்ந்து வாந்தி வந்துகொண்டே இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.எண்டோஸ்கோப் மூலம் ஒரு நீண்ட மெல்லிய நெகிழ்வான குழாயின் வழியாக ஒளியைப் பாய்ச்சி வீடியோ கேமராவின் வழியாக பார்த்தபோது, உணவுக்குழாயின் இடையில் அவரது வயிற்றுக்குள் செல்போன் சிக்கி இருப்பதை வைத்தியர்கள் கண்டறிந்தனர்.

செல்போனை விழுங்கிய பத்துமணி நேரத்துக்கு பின்னர் வயிற்றின் பக்கவாட்டில் அறுவை சிகிச்சை செய்து, அந்த செல்போனை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர். சுமார் ஒருவார மருத்துவ கண்காணிப்புக்கு பின்னர் அவன் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சிகிச்சை முடிந்து நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அந்த கைதி தற்போது நலமாக இருப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.