
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் காணப்பட்ட சீ.டீ.ஸ்கான் இயந்திரம் பழுதடைந்திருப்பதாக பாராமெடிக்கல் சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.குறித்த இயந்திரத்தினூடாக தொடர்ச்சியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதனால் அதன் பராமரிப்பு பணிகள் தாமதப்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் இயந்திரத்தை சரி செய்வதற்கு ஒருவார காலம் தேவைப்படும் என்று அதன் செயலாளர் தர்மகீர்த்தி ஏபா கூறியுள்ளார்.அவசர சிகிச்சைப் பிரிவில் பழுதடைந்த நிலையில் உள்ள ஸ்கான் இயந்திரம் திருத்துதல் பணிக்காக விடப்பட்டுள்ளதால் தற்போது நோயாளிகளின் விடுதிகளில் உள்ள ஸ்கான் இயந்திரம் மூலமாக பரிசோதனைகள் வழமை போன்று இடம்பெறுவதாக தர்மகீர்த்தி ஏபா மேலும் கூறினார்.





