அய்யய்யோ நான் அரசுக்கு எதிராக பேசவே இல்லை : அலறும் தனுஷ்!!

340

Danush

ஒரு படத்திற்கு (தலைவா) தடை விதிப்பதில் காட்டும் முயற்சியை நாட்டின் வளர்ச்சிக்கு காட்டினால் நாடு நன்றாக இருக்கும் என்று இரு தினங்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்த தனுஷ் இப்போது நான் அரசுக்கு எதிராக பேசவே இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

தலைவா படம் தமிழகத்தில் வெளிவராத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர்கள் சிலரும் கருத்து தெரிவித்திருந்தனர். சிம்பு, பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தன் பங்குக்கு கருத்துத் தெரிவித்த தனுஷ் ” தலைவா படத்திற்கு நிகழ்ந்த பிரச்சனை நியாயமற்றது. ஒரு படத்திற்கு தடை விதிப்பதில் காட்டும் முயற்சியை நாட்டின் வளர்ச்சிக்கு காட்டினால் நாடு நன்றாக இருக்கும்,” என்று டுவிட் செய்திருந்தார்.

அரசுக்கு எதிரான விமர்சனமாக இது பார்க்கப்பட்டதால் இந்த குறித்து பலரும் பலவிதமாக எழுத ஆரம்பித்தனர். அலறிய தனுஷ் இவற்றைக் கவனித்த தனுஷ் உடனடியாக தனது டுவிட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்ததோடு அதை எஸ்எம்எஸ் மூலமாகவும் அறிக்கை வடிவிலும் மீடியாவுக்கு அனுப்பியுள்ளார்.

நான் அப்படி சொல்லவே இல்லை அதில் “ஊடக நண்பர்களுக்கு வணக்கம். சுவிட்சர்லாந்திலிருந்து தனுஷ். எனது ட்விட்டரில் தலைவா படம் பற்றிக் கூறியிருந்த கருத்தின் ஒரு பகுதி மட்டும் ஒரு சில நாளிதழ்களில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

ஒரு பகுதி மட்டுமே பிரசுரிக்கப்பட்டிருந்ததால் அது வேறு அர்த்தத்தைத் தருகிறது. தமிழக அரசுக்கு எதிரான கருத்துக்களை நான் தெரிவிக்கவில்லை. நான் அரசுக்கு எதிரானவன் அல்ல,” என்று குறிப்பிட்டுள்ளார்.