பிரித்தானியாவில் டொமினோ பீட்சா ஊழியர் மீது புகார் தெரிவித்த வாடிக்கையாளரை வீடு தேடி வந்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட போல் வில்லியம் என்பவர் இதுகுறித்து தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் டொமினோ ஊழியரால் தாக்கப்பட்டுள்ள படத்தையும் பதிவேற்றியுள்ளார்.
இதனிடையே இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த டொமினோஸ் நிறுவனம், தற்போது இந்த விவகாரம் பொலிஸ் விசாரணையில் இருப்பதாகவும், மேற்கொண்டு தகவல்கள் எதையும் வெளியிட இயலாது எனவும் தெரிவித்துள்ளனர்.
ஏற்பட்ட நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்துள்ள அந்த நிறுவனம், விசாரணை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பையும் இந்த விவகாரம் தொடர்பாக அளிக்க இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அதிக தொலைப்பேசி அழைப்புகள் வந்துள்ளதை அடுத்து டெவன் பகுதி பொலிசார் கருத்து கூறவும் மறுத்துள்ளனர்.
வாடிக்கையாளர் போல் வில்லியம் தாம் ஒடர் செய்த பீட்சாவில் தூவப்பட்டிருக்கும் உணவுப்பொருட்கள் குறைவாக இருந்துள்ளதை சுட்டிக்காட்டி அந்த ஊழியர் மீது புகார் அளித்ததே இந்த விவகாரத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.






