ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்படுமா?

1063

Train Fair Srilanka

வற் வரி 15 வீதத்தினால் உயர்த்தப்பட்ட போதிலும் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட மாட்டாது என புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் ஏ.பீ.ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.

சிங்களப் பத்திரிகையொன்றுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

ரயில் கட்டணங்களில் மாற்றமில்லை. ஏதேனும் காரணங்களுக்காக ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட வேண்டுமாயின் அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
இதுவரையில் அவ்வாறு ஒர் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

ரயில் பயணங்களுக்காக செலவிடப்படும் பணத்தில் 50 வீதமான பணம் எரிபொருளுக்காக செலவிடப்படுகின்றது. எரிபொருள் விலைகள் குறைவடைந்த காரணத்தினால் செலவுகள் குறைவாகவே காணப்படுகின்றன.

ரயில் திணைக்களம் தற்போது வருடாந்தம் 6000 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.