உலகம் அழியப்போவதாக கூறி 5 நண்பர்களை கொன்ற மாணவர்!!

461

Untitled
கனடா நாட்டில் உலகம் அழியப்போவதாக கூறி 5 நண்பர்களை கொலை செய்த மாணவர் ஒருவர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கேரி நகரில் மேத்தியூ டி க்ரூட்(24) என்ற வாலிபர் அங்குள்ள பல்கழைக்கழகம் ஒன்றில் அறிவியல் மற்றும் உளவியல் பயின்று வந்துள்ளார்.

இவரது தந்தை காவல் துறையில்உயர் பொறுப்பில் பணியாற்றி வருகிறார். ஆனால், இந்த மாணவர்போதை மருந்து பழக்கத்திற்கு ஆளானதால் மன உளைச்சல் பிரச்சனைகளும் அடிக்கடி ஏற்பட்டு வந்துள்ளன.இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டில் சமூகவலைத்தளத்தில் பரபரப்பான பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘இந்த உலகம் விரைவில் அழியப்போகிறது. இந்த அழிவிற்கு காரணமாக இருக்கும் சில ரத்தக் காட்டேறிகளை கொல்ல வேண்டும்.மேலும், அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா கிறித்துவ மதத்திற்கு எதிரானவர்’என பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.இந்த தகவலை வெளியிட்ட சிலதினங்களுக்கு பிறகு நண்பர்களுடன் கல்லூரி வளாகத்திற்கு அருகே உள்ள ஒரு குடியிருப்பு ஒன்றில் பார்ட்டிக்கு ஏற்பாடுசெய்துள்ளார்.இந்த பார்ட்டியில் ஒரு பெண் உள்பட 22 முதல் 27 வயதுடைய நண்பர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் பொலிசாருக்கு பரபரப்பு தகவல் ஒன்று வந்துள்ளது.தகவல் பெற்ற பொலிசார் அங்குசென்று பார்த்தபோது, 5 பேரில் மூவர் ஏற்கனவே ரத்த வெள்ளத்தில் இறந்துக் கிடந்துள்ளனர். மேலும், பெண் உள்படஇருவர் உயிருக்கு போராடியுள்ளனர்.ஆனால்,இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக மேத்தியூவை பொலிசார் கைது செய்து சோதனை செய்தபோது, அவரது உடுப்பிற்குள் சமையல் செய்யப்பயன்படுத்தப்படும் ‘கிராம்பு மற்றும் பூண்டு’ ஆகியஉணவு பொருட்களை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அப்போது, ‘கிராம்பு மற்றும் பூண்டு’ ஆகியவற்றை நம்முடன் வைத்திருந்தால் ரத்தக் காட்டேறிகள் நம்மை நெருங்காது’என மேத்தியூ விளக்கம் அளித்துள்ளார்.மேலும், 5 பேரும் ரத்தக் காட்டேறிகள் என்பதால்அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் ’என மேத்தியூ கோபத்துடன் பேசியுள்ளார்.

அல்பேர்ட்டா மாகாணத்தை உலுக்கிய இந்த கொலை நிகழ்ந்த2 வருடங்களுக்கு பிறகு இந்த வழக்குநேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.‘கொலையைதான் செய்யவில்லை’என வாக்குவாதம் செய்த மேத்தியூ இறுதியில் தனது குற்றங்கள் அனைத்தையும் நீதிபதி முன்னால் ஒப்புக்கொண்டுள்ளார்.இந்த வழக்கு தொடர்பான இறுதி தீர்ப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.