கிளிநொச்சி திருவையாறு ஐயா கல்விநிலையம் , வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் மற்றும் வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி ஆகியவற்றின் அனுசரணையோடு 14 வது அனைத்துலக தமிழ் உரைநடை ஆய்வு மாநாட்டு கருத்தரங்கு எதிர்வரும் 22.05.2016 ஞாயிற்றுகிழமை காலை ஒன்பது(9.00) மணியிலிருந்து வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தேசிய கல்வியியல் கல்லூரியில் அனைத்துலக உரைநடைத் தமிழ் மாநாட்டின் இலங்கைக்கான இயக்குனர் பேராசிரியர் முனைவர் கனகசபாபதி நாகேஸ்வரன் தலைமையில் இடம்பெற உள்ளது .
மேற்படி நிகழ்வில் முதன்மை விருந்தினராக மாண்புமிகு நீதியரசர் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களும் சிறப்புவிருந்தினராக இந்திய துணைத்தூதர் நடராஜன் அவர்களும் கலந்து கொள்கின்றனர்.






