வவுனியா தெற்கு வலயமட்ட தமிழ் மொழித்தின போட்டிகளில் தமிழ் மத்திய மகாவித்தியாலயம் முன்னிலை!!

957

Tamil Molithinam

அகில இலங்கை தமிழ் மொழித்தின வலய மட்டப் போட்டிகள் வவுனியா தெற்கு கல்வி வலயமட்ட பாடசாலைகளுக்கிடையே நடைபெற்றது. பல பாடசாலைகள் பங்குபற்றியிருந்த இந்நிகழ்வுகள் கடந்த 30.04.2016 தொடக்கம் 15.05.2016 வரை நடைபெற்றது.

இவ் வலயமட்ட தமிழ்த்தின போட்டியில் 12 நிகழ்வுகள் முதலாம் இடங்களையும் 6 நிகழ்வுகள் இரண்டாம் இடங்களையும்,1 நிகழ்வு மூன்றாம் இடத்தினையும் பெற்றது.

முதல் இடங்களைப் பெற்ற 12 நிகழ்வுகள்; மாகாண மட்டப் போட்டியில் பங்குபற்ற உள்ளன. வவுனியா தெற்கு கல்வி வலயமட்டத்தில் நடைபெற்ற தமிழ்தின போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் அதி கூடிய இடங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.