வித்தியா கொலை வழக்கு : மரபணு சோதனை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு!!

536

Vidya_case

யாழ் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்விற்குட்படுத்தி கொலை செய்யப்பட்டமை தொடர்பான மரபணு சோதனை அறிக்கை நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று இந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இந்த வழக்குடன் தொடர்புடைய ஏனைய அறிக்கைகளையும் உடனடியாக நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.ரியாழ் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை இன்றைய வழக்கு விசாரணையின் போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 12 சந்தேகநபர்களும் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

மேலும், மாணவி வித்தியாவின் கொலை தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த மாதம் முதலாம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.