வவுனியா நெடுங்கேணி பகுதியில் குளம் உடைப்பு : போக்குவரத்து பாதிப்பு!!

750

Nedunkeni Kulam

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட நயினாமடு கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள விவசாயக் கிராமமே பெரியமடு இக்கிராமத்தில் நூற்றி இருபதுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் விவசாயத்தை தமது பிரதான தொழிலாகக்கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள்.

இக்கிராமத்தில் இரண்டு பிரதான சிறிய நீர்ப்பாசன குளங்களும் இரண்டு பாவனைக்கு உட்படுத்த முடியாத நீர்ப்பாசனக் குளங்களும் அமைந்துள்ளன.

கடந்த நான்கு நாட்களாக பெய்த அடைமழை காரணமாக இக்கிராமத்தின் பிரதான நீர்ப்பாசனக் குளமான வண்ணாங்குளத்திற்கு நீரைக்கொண்டுவருவதற்காக புதிதாக கடந்த வருடம் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு இந்தவருடம் முற்பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட கால்வாயுடன் கூடிய இரண்டு கிலோ மீற்றருக்கும் மேற்பட்ட அணைக் கட்டானது உடைப்பெடுத்துள்ளது.

இதனால் வண்ணாங்குளத்திற்கான பிரதான நீர்வரத்து தடைப்பட்டுள்ளதாகவும் இதனை திருத்தியமைப்பதற்கு கமக்கார அமைப்பும் கமநல சேவை திணைக்களமும் விரைந்து செயற்பட்டு திருத்தப்பணிகளை மேற்கொள்ள வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன் இக்கிராமத்தை ஊடறுத்து முத்தையன் கட்டுகுளத்திற்கு நீரைக்கொண்டுசெல்லும் பிரதான ஆறாக கருதப்படும் கரடியான் ஆறு பெருக்கெடுத்துப்பாய்வதனால் பெரியமடுவில் இருந்து வண்ணாங்குளம் கிராமத்துக்கு செல்லும் பிரதான வீதிப்போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

வண்ணாங்குளம் கிராமத்திற்கு ஆரம்பகாலம்முதல் இன்றுவரை ஆற்றை மறித்து பாலம் அமைக்கப்படாத காரணத்தால் மக்கள் தமது உயிர்களை பணையம்வைத்தே போக்குவரத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்.

ஆயிலடிச் சந்தியிலிருந்து பெரியமடு ஊடாக வண்ணாங்குளம் செல்லும் ஐந்து கிலோ மீற்றருக்கும் மேற்பட்ட பிரதான வீதியானது 1996 ஆம் ஆண்டிற்கு பின்னர் இன்றுவரை புணரமைக்கப்படாமையால் வீதியானது குண்றும் குழியுமாக போக்குவரத்து செய்யமுடியாத நிலையில் காணப்படுவதனால் பாடசாலை மாணவர்களும் கிராம மக்களும் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றார்கள்.

இது தொடர்பில் வன்னிமாவட்ட பாராளுமன்ற, மாகாணசபை, நெடுங்கேணி பிரதேசசபை, உறுப்பினர்கள் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வீதி திருத்தப்பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இவ் அடைமழை காரணமாக மக்களின் வீட்டுத்தோட்டப் பயிர்களான பப்பாசி, மிளகாய், முருங்கை போன்ற பயிர்களும் அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

13178866_1081880211872191_7181603467719813053_n 13221689_1081878978538981_5744669154624867043_n 13227110_1081880118538867_4520941794290591085_n 13227115_1081877475205798_4646279688932550908_n 13233026_1081879121872300_7603128052007098363_n 13239455_1081876645205881_6453158477402769658_n 13240701_1081877325205813_4215479624548853344_n 13241112_1081876835205862_8049732360132582241_n 13254183_1081879541872258_2898374126840238226_n 13260034_1081876348539244_179847624791595527_n 13263672_1081876991872513_2550690556664899362_n 13265841_1081878401872372_8669219165526759798_n