வவுனியாவில் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு உதவி தேவை!!

1372

Vavuniya

வவுனியா மரக்காரம்பளை வீதி, கணேசபுரத்தில் வசித்துவரும் 20 வயது இளைஞனின் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இளைஞனின் குடும்பம் மிகவும் வறுமையில் யாழ்ப்பாணத்திலிருந்து இறுதி யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து வவுனியாவில் தற்காலிகமாக வசித்துவருகின்றனர்.

தந்தையை இழந்து சகோதரன், மற்றும் தாயுடன் வசித்துவருகின்றார். வைத்தியர்கள் நான்கு மாதங்கள் கால அவகாசம் வழங்கியுள்ளதுடன் 15 இலட்சம் ரூபா வரையில் சிறுநீரக மாற்று சிகிச்சைக்குத் தேவைப்படுவதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே கருணை உள்ளம் கொண்டவர்கள் இவ் இளைஞனுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு கருணை மனுவில் இளைஞன் கோரியுள்ளார்.

தொடர்புகளுக்கு-
0779387994
0776540354