சிங்கத்தின் கூண்டிற்குள் நிர்வாணமாகக் குதித்த நபர் : இறந்துபோன சிங்கங்கள்!!(வீடியோ)

668

Franco-Luis-Ferrada-Roman

சிலி நாட்டில் நபர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் சிங்கத்தின் கூண்டிற்குள் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிலியின் தலைநகரான சந்தியாகோவில் அமைந்துள்ள Chilean National விலங்கியல் பூங்காவில் பார்வையாளர்களின் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், பூங்காவில் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிங்கத்தினை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், யாரும் எதிர்பார்க்கா வண்ணம், 20 வயதுடைய FrancoLuis Ferrada Roman என்ற நபர் தனது ஆடைகளை களைந்துவிட்டு, சிங்கத்தின் கூண்டிற்குள் குதித்துள்ளார்.

கூண்டிற்குள் ஆண் பெண் சிங்கங்கள் இருந்துள்ளன, முதலில் அந்த நபருடன் விளையாட ஆரம்பித்த சிங்கங்கள் பின்னர், தனது தாக்குதலை ஆரம்பித்தன, பொதுமக்கள் முன்னிலையில் அந்த நபரை சிங்கங்கள் உக்கிர வேட்டையாட, பதிலுக்கு அந்த நபரும் சிங்கத்துடன் மல்லுக்கட்டியுள்ளார்.

இந்த சண்டையினை பார்க்கமுடியாமல் மக்கள் அச்சத்தில் அலறியுள்ளனர், விரைந்து வந்த பூங்கா அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், துப்பாக்கியால் சுட்டதில் சிங்கங்கள் இரண்டும் உயிரிழந்தன.

அதன் பின்னர் மோசமாக காயமடைந்திருந்த அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து பூங்காவின் இயக்குனர் Mauricio Fabr கூறியதாவது, பூங்காவிற்கு வரும் மக்களுக்கு அதிக பாதுகாப்பு கொடுப்போம், கூட்டம் மிகுதியாக இருந்ததால் எங்களால் இதனை தடுக்க முடியவில்லை.

இருப்பினும், அந்நபரின் உயிரை காப்பாற்றுவதற்காக சிங்கத்தினை சுட்டத்தில் அது உயிரிழந்துவிட்டது, அந்நபர் தற்கொலை செய்யும் நோக்கிலேயே சிங்கத்தன் கூண்டிற்குள் குதித்திருக்க வேண்டும் என உறுதியாக தெரிகிறது என கூறியுள்ளார்.

தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்நபரின் உயிர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.