புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் கனவை நிறைவேற்றிய அமிதாப் பச்சன்!!

445

Amirtap

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமியை தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று அச்சிறுமியின் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார் அமிதாப் பச்சன்.

ஹர்டிகா என்ற சிறுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது ஒக்சிஜன் சிலிண்டரின் துணையுடன் வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், ஹர்டிகா பொலிவுட் நடிகர் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை சந்தித்துப் பேச வேண்டும் என்று விரும்பியுள்ளார்.

இது குறித்து அமிதாப் பச்சனுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறுமியின் பிறந்த நாளன்று அவரை சந்திக்க விரும்புவதாக நடிகர் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள தனது இல்லத்துக்கு ஹர்டிகாவை வரவழைத்து, அவருக்கு பூங்கொத்து அளித்து பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அங்கேயே பிறந்தநாள் கேக்கை வெட்டி, அந்த சிறுமிக்குக் கொடுத்துள்ளார். இதனால் அந்த சிறுமி மகிழ்ச்சியில் திளைத்துப் போனார்.