ஜூலை மாதம் இலங்கையுடன் மோதவுள்ள அவுஸ்திரேலிய 15 வீரர்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் அணியில் மிட்செல் ஸ்டார்க், மோய்சஸ் ஹென்றிக்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
காயம் காரணமாக பீட்டர் சிடில், ஜேம்ஸ் பேட்டின்சன் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் அணித் தேர்வுக்கு பரிசீலிக்கப்படவில்லை.
மேலும் ஜேக்சன் பேர்ட், நேதன் கூல்டர்-நைல் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்பின்னுக்கு நேதன் லயன், ஸ்டீஃபன் ஒகீஃப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பல்லேகல மைதானத்தில் ஜூலை 26ம் திகதி தொடங்குகிறது.
இதன்படி இலங்கையை எதிர்கொள்ளவுள்ள அவிஸ்திரேலிய அணியில், ஸ்டீவன் ஸ்மித் (தலைவர்), டேவிட் வார்னர், ஜேக்சன் பேர்ட், ஜோ பர்ன்ஸ், நேதன் கூல்டர் நைல், ஜோஷ் ஹேசில்வுட், மோய்சஸ் ஹென்றிக்ஸ், உஸ்மான் கவாஜா, நேதன் லயன், மிட்செல் மார்ஷ், ஷான் மார்ஷ், பீட்டர் நெவில், ஸ்டீஃபன் ஒகீஃப், மிட்செல் ஸ்டார்க், ஆடம் வோஜஸ் ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.






