மின்மானியில் திருட்டு வேலை – இருவர் கைது!!

699

arrest (1)
திருகோணமலை கந்தளாயில் சட்டவிரோதமான முறையில் மின்மானியில் திருட்டு வேலைகளை மேற்கொண்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த இருவரையும் நேற்று (24) மாலையில் கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் பேராறு பிரதேசத்தில் பொலிஸாருடன் இணைந்து மின்சாரசபையின் உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரும் பேராறு பகுதியைச் சேர்ந்த 51, மற்றும் 29 வயதுடை நபர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.