குழந்தைவரம் தருவதாக பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்த போலிச் சாமியார்!!

1349

Samiyar

இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் குழந்தைவரம் தருவதாக பெண்களை மயக்கி, பலாத்காரம் செய்து, அந்த ஆபாச காட்சிகளை வீடியோவாகவும் எடுத்த போலி சாமியாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பரமானந்த பாபா என்ற போலி பெயருடன் உலவிவந்த ராம் சங்கர் திவாரி என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் உத்தரப்பிரதேசம் மாநிலம், பாரபங்கி மாவட்டத்தில் உள்ள ஹராய் கிராமத்தில் ஆசிரமம் ஒன்றை அமைத்தார்.

குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு சிறப்பு பரிகாரப் பூஜை செய்வதாக கூறி, இவர் பல பெண்களை பலாத்காரம் செய்து, சீரழித்ததாக முன்னர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆனால், அந்த புகார்களை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால் பரமானந்த பாபாவின் பித்தலாட்டம் வெளியுலகுக்கு வெட்டவெளிச்சம் ஆகாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், சில பெண்களுடன் இவர் ஆபாசமான நிலையில் உள்ள வீடியோ காட்சிகள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

இதுதொடர்பான ஆதாரத்துடன் பொலிசாரிடம் உள்ளூரை சேர்ந்த சிலர் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் அந்த போலி சாமியாரை இன்று கைது செய்துள்ள பொலிசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.