இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக சமிந்த பண்டாரவை தொடரில் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கீழ் முதுகில் ஏற்பட்டுள்ள உபாதையால் சிரமப்பட்டு வரும் துஷ்மந்த சமீரவை நான்கு மாதங்களுக்கு ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமையால், தொடர்ந்தும் சிகிச்சைகளைப் பெற சமீர இலங்கைக்கு திரும்புகிறார்.
இந்தநிலையிலேயே இவருக்கு பதிலாக சமிந்த பண்டார அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதோடு, இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தநிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






