அநுராதபுரம் நுவர வாவியில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு!!

631

Nuwara

அநுராதபுரம் நுவர வாவியில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மிஹிந்தலை பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த படகில் பயணித்த மேலும் இருவர் மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது.