கடைசிவரை துடுப்பெடுத்தாடியிருந்தால் 300 ஓட்டங்கள் எடுத்திருப்பேன் : தவான்..!!

352

Shikhar_Dhawan

A அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 150 பந்துகளில் 248 ஓட்டங்கள் விளாசி இந்தியா A அணியை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறச் செய்த ஷிகர் தவானின் அதிரடி ஆட்டம் உலகையே மூக்கின் மேல் விரல் வைக்கச் செய்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், 44வது ஓவரில் நான் அவுட் ஆகும் போது நினைத்தேன், என் மனதில் வந்து போன எண்ணம் என்னவெனில் கடைசி வரை துடுப்பெடுத்தாடியிருந்திருந்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் 300 ஓட்டங்கள் என்ற அரிய சாதனையை நிகழ்த்தியிருக்கலாம் என்பதே.

இருப்பினும் இந்த இன்னிங்ஸே மகிழ்ச்சியளிக்கிறது. சச்சின், ஷேவாக் ஆகியோரது சாதனைகளை நான் கடந்தேன் என்பது என் மனதில் தோன்றியது.

ஆனால் அவர்கள் சர்வதேச அரங்கில் இரட்டைச் சத சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள். எனவே ஒப்பிடக்கூடாது. அவர்களுடையது இந்த இன்னிங்ஸை காட்டிலும் பன் மடங்கு உயர்ந்தது.

50 ஓவர் போட்டியில் இரட்டை சதம் அடித்தது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவில்லை என்பது சிறிய வருத்தமளிக்கிறது எனவும் கூறியுள்ளார்.