அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக கூறி இலங்கை அகதிகளிடம் பணம் சேகரித்த நால்வர் தமிழகத்தில் கைது!!

514

arrest (1)

அவுஸ்திரேலியாவுக்கு மனிதக் கடத்தலை மேற்கொள்வதற்காக பணச் சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நான்குபேரை கோயம்புத்தூரில் வைத்து கியூ பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இவர்களில் ஒரு இலங்கை அகதியும் அடங்கியுள்ளார். ஏனையவர்களில் இலங்கையர் ஒருவர்( கிளிநொச்சி அக்கராயன்குளம்) மற்றும் தமிழகம் சென்னையை சேர்ந்த இருவர் ஆகியோர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களை சட்டவிரோதமாக படகுகளில் ஏற்றிச் செல்வதற்காக கோயம்புத்தூரில் உள்ள கொத்தூர் கிராம அகதி முகாமில் பணச் சேகரிப்பில் ஈடுபட்டார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். கோத்தூர் அகதி முகாம் 1980 ஆண்டுகளில் இருந்து செயற்படுகிறது. அங்கு 546 இலங்கை அகதிகள் தங்கியுள்ளனர்.ஆரம்ப விசாரணைகளில் இருந்து கைது செய்யப்பட்ட நால்வரும் அவுஸ்திரேலியா செல்வதற்காக ஒரு ஆளுக்கு 70 ஆயிரம் ரூபாவை அகதிகளில் கோரியதாக தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில் அவர்கள் 6 அகதிகளிடம் இருந்து 3.7 லட்சம் இந்திய ரூபாவை சேகரித்துள்ளனர்.இந்தநிலையில் அகதி ஒருவர் பொலிசாருக்கு வழங்கிய தகவலை அடுத்தே இந்த விடயம் வெளியில் தெரியவந்துள்ளது.கைதுசெய்யப்பட்டவர்கள் சென்னை புழல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.