புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் வேகமாக பயணித்த சாரதி பயிற்சி வாகனம் விபத்து!!

944

 
புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் சாரதி பயிற்சி வாகனம் நேற்று இரவு விபத்துக்குள்ளானது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் நேற்று (25.05.2016) இரவு 7.30 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்த சாரதி பயிற்சி வாகனத்தின் சக்கரம் காற்றுப்போனதால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் காயமடைந்த சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் சாரதிபயிற்சி வாகனம் அதிவேகமாக சென்றதாக சம்பவத்தினை நேரில் பார்த்த மக்கள் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

news (1) news (2) news (3) news (4) news (5)