களுதாவளையில் ஒருவர் அடித்துக் கொலை!!

506

1 (72)

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுதாவளைக் கிராமத்தைச் சேர்ந்த சீனித்தம்பி மோகன் (வயது 46) என்பவரை இனந்தெரியாத நபர்கள் கொலைசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சம்பவம் புதன்கிழமை (25) இரவு இடம்பெற்றுள்ளது. தடிகள் மற்றும் இரும்புக் கம்பிகளால் தாக்குதலுக்கு உள்ளாகிய இவர், களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இவரது மனைவியான இராஜேஸ்வரி (வயது 44) என்பவரும் அடி காயங்களுக்கு உள்ளான நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இரண்டு பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்களை தேடி வருவதாகவும் இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.