மிரள வைக்கும் இணைய வேகம் : ஜேர்மன் பொறியியலாளர்கள் சாதனை!!

275

Li-fi

இன்றைய கால கட்டத்தில் இணையமும் மனித வாழ்வில் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இதனால் இணையத் தொழில்நுட்பத்தில் பல புதுமைகளைப் புகுத்த பல்வேறு முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு அங்கமாக Li-Fi எனும் மின்குமிழ் மூலம் அதிவேக இணைய இணைப்பை வழங்கும் சாத்தியம் பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது இத் தொழில்நுட்பத்தின் ஊடாக ஜேர்மன் பொறியியலாளர் குழு ஒன்று புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது செக்கனுக்கு 6 ஜிகாபிட்ஸ் வேகத்தில் 37 கிலோ மீற்றர் தூரத்திற்கு தரவுகள் கடத்தப்பட்டுள்ளது.

இந்த வேகத்தின் ஊடாக டிவிடியிலுள்ள தரவுகளை வெறும் 10 செக்கன்களிலேயே பரிமாற்றம் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் விசேட அம்சம் என்னவென்றால், வழமையாக இணைய வேகத்தின் சாத்தியம் குறித்த ஆராய்ச்சிகள் மென்பொருட்களை பயன்படுத்தியே மேற்கொள்ளப்படும்.

ஆனால் இவ் ஆராய்ச்சியானது நிஜமாகவே இணைய இணைப்பினை உருவாக்கி வெற்றி காணப்பட்டுள்ளது.