முடிவிற்கு வருகின்றதா ஜக் கலிஸின் கிரிக்கெட் எதிர்காலம்..!!

306

Jacques-Kallis

தனது ஒருநாள் சர்வதேசப் போட்டி எதிர்காலம் குறித்துத் தென்னாபிரிக்க அணியின் சகலதுறை வீரர் முடிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவின் புதிய பயிற்றுவிப்பாளர் றசல் டொமிங்கோவின் வேண்டுகோள் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவின் டெஸ்ட் அணியில் தொடர்ந்தும் முக்கியமான வீரராகக் காணப்படும் ஜக்ஸ் கலிஸ், இறுதியாக 2012ம் ஆண்டிலேயே ஒருநாள் சர்வதேசப் போட்டியொன்றில் பங்குபற்றியிருந்தார். ஆனால் 2015ம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக்கிண்ணத்தில் பங்குபெறும் தனது விருப்பத்தை அவர் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கு முன்னர் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றிய கரி கேர்ஸ்ரனின் பயிற்றுவிப்பின் போது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஜக்ஸ் கலிஸ் விரும்பும் போது பங்குபற்றும் உரிமை வழங்கப்பட்டிருந்தது.

எனினும் புதிய பயிற்றுவிப்பாளராகப் பதவியேற்றுள்ள றசல் டொமிங்கோ அவ்வாறான நடைமுறைகளைப் பின்பற்ற மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் வழங்கியுள்ள பேட்டியின் அடிப்படையில் 2015ம் ஆண்டில் இடம்பெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டிகளில் ஜக்ஸ் கலிஸ் பங்குபெற விரும்பினால் அவர் தென்னாபிரிக்கா சார்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தனது ஒருநாள் சர்வதேசப் போட்டி எதிர்காலம் குறித்து ஜக்ஸ் கலிஸ் முடிவெடுக்க வேண்டிய நிலை ஜக்ஸ் கலிஸிற்கு ஏற்பட்டுள்ளது.