காதலுக்கு வயதில்லை.. 42 வருடங்களுக்கு பிறகு பெற்றோருக்கு மகன் கொடுத்த இன்ப அதிர்ச்சி!!

496

625.0.560.350.160.300.053.800.668.160.90
சீனாவை சேர்ந்த வயதான தம்பதி 42 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தங்களது திருமண புகைப்படங்களை எடுத்துள்ளனர்.ஜாவோ மற்றும் எல்வி என்பவர்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் Mao Zedong அவரின் கலாச்சார புரட்சியின் போது திருமணம் செய்து கொண்டனர். அதாவது 1974ம் ஆண்டு ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது.

சர்வாதிகாரி ஆட்சியின் அந்த காலக்கட்டத்தில் சில விடயங்களால் இருவரும் வேறு வேறு இடங்களில் வேலைப் பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் அப்போது திருமண புகைப்படங்கள் எடுக்க முடியாமல் போனது.தற்போது இவர்களுக்கு 66 வயதாகிறது. இந்த நிலையில் தனது மகனை அவுஸ்திரேலியாவில் சந்திக்க அவர்கள் சென்றிருந்தனர்.

அப்போது சிட்னியில் இவர்களது திருமண புகைப்படத்திற்கு அவரது மகன் ஏற்பாடு செய்திருந்தார். இதனை பார்த்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய அவர்கள், புதுமண தம்பதி போல் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.இந்த புகைப்படங்களை எடுத்த புகைப்படக்காரர் ராபார் வென் கூறுகையில், இந்த வயதான தம்பதி அவரது மகன் மற்றும் பேரக் குழந்தைகளை பார்க்க இங்கு வந்தனர்.அவர்களுக்கு இப்படி புகைப்படம் எடுக்கப் போகிறோம் என்று தெரியாது. நானும் இதுபோன்ற ஒரு வித்தியாசமான புகைப்படங்களை எடுத்ததும் இல்லை என்று நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.