விமானத்தை விட வேகமான வாகனம் : அமெரிக்காவில் புதிய முயற்சி..!!

369

large

போக்குவரத்து முறைகள் காலத்துக்கேற்ப மாற்றம் கண்டு வரும் நிலையில் எதிர்காலத்தில் எத்தகைய போக்குவரத்து முறைகள் எப்படி இருக்கும் என்பதற்கான அடையாளங்களும் இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டது.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் , ஹைபர் லூப் (Hyperloop) என்ற பெயரில் புதிய போக்குவரத்து முறை குறித்த செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். ரயிலை போன்றே தோற்றம் கொண்ட இந்த வாகனம் ஒலியை விட வேகமாக பறக்கும் விமானத்தின் தொழில் நுட்பத்தை கொண்டதாக இருக்கும் என எலான் மஸ்க் தெரிவித்தார்.

மின்காந்த அலைகளை கொண்டு இயங்கும் இந்த வாகனம் தரையை தொடாமல் காற்றின் மேல் வழுக்கிக் கொண்டும் செல்வதாக இருக்கும். அமெரிக்காவின் முக்கிய நகரங்களான சென்பிரான்சிஸ்கோவுக்கும் லொஸ் ஏஞ்சலிசுக்கும் இடையிலான 600 கிலோ மீட்டர் தூரத்தை இந்த வாகனம் அரை மணி நேரத்தில் கடக்கும் என எலான் மஸ்க் தெரிவித்தார்.

இது விமான பயணத்தை விட இரு மடங்கு வேகமானதாக இருக்கும் என்றும் எலான் மஸ்க் கூறினார். மணிக்கு 800 மைல் வேகத்தில் செல்லும் இந்த வாகனம் செலவு குறைவானதாகவும் பாதுகாப்பு மிக்கதாகவும் இருக்கும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்தார்.