உலகின் 41ஆவது செல்வந்தரான சவூதி இளவரசர் இலங்கை வருகிறார்!!

932

gettyimages-479123616
2016 ஆம் ஆண்டு போர்பஸ் பட்டியலின்படி உலக பணக்காரர் வரிசையில் 41 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ள சவூதி இளவரசர் அல் வாஹீட் பின் தலால் இலங்கை வரவுள்ளார்.இந்த விஜயம் விரைவில் இடம்பெறும் என்று செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று அவர் விரைவில் இலங்கை வரவுள்ளதாக பிரதி வெளியுறவுத் துறை அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை இளவரசர், இலங்கையின் வெள்ள அனர்த்த பாதிப்புக்களின் சீரமைப்புக்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை உதவியாக தருவதற்கு அறிவித்துள்ளதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.