வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு இலவசமாக மின்சார இணைப்பு!!

1249

electricity pylon

இலங்கை மின்சார சபையும் தனிநபர் மின் உற்பத்தியாளர்களும் இணைந்து 10 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்க தீர்மானித்துள்ளனர்.மின்வலு மின்சக்தி அமைச்சர் ரன்ஜித் சியம்பளாபிட்டியவின் பணிப்பின் பேரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள வீடுகளின் சேதங்கள் தொடர்பாக கணிப்பீடுகள் நடைபெற்று வருவதுடன் மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கு இலங்கை தனியார் மின் உற்பத்தியாளர் நிறுவனம் 7 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.

வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவொரு சுமையும் வழங்காமல் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட வேண்டுமென அமைச்சரின் வழிகாட்டலில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அவ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.