கர்நாடகாவில் பஞ்சாயத்து தலைவர் ஒருவர் பெண் ஊழியரை பாலியல் ரீதியாக தாக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவின் மாண்டியா பகுதியை சேர்ந்த பஞ்சாயத்தை தலைவர் சந்திரஹாசா (வயது 30).
இவர் நேற்று மாலை அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளன.இந்நிலையில் குறித்த பெண் அளித்த புகாரின் பேரில் அவரை கைது செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






